அவளே யோனி ஆவாள், அண்டத்தைப் பிறப்பித்த கருவறை ஆவாள். அவளே தெய்வீகப் பேரண்டத் தாய் மா காமாக்யா ஆவாள். அவளே ஆதி வெறுமையும், வெளிப்பட்ட பிரபஞ்சத்தின் வடிவமும் ஆவாள். அவளே அனைத்துப் பொருள்களின், மூலகங்களின், ஆற்றல் வடிவங்களின் தெய்வீகத் தாய் ஆவாள். அவளுடைய மகத்துவத்திற்கு முந்தியது எதுவும் இப்பேரண்டத்தில் இல்லை.
அச்ஸாம், குவஹாத்தியில் உள்ள மா காமாக்யா கோயிலில் நடைபெறும் அம்புபாச்சி திருவிழா, அனைத்து உயிரினங்களின் பிறப்பு இறப்புச் சுழற்சிகளைக் குறிக்கும் மா காமாக்யாவின் ஆண்டுதோறும் நிகழும் மாதவிடாய்ச் சுழற்சியையும், பூமித் தாயின் படைப்பு ஆற்றலையும் வளர்ப்பு ஆற்றலையும் கொண்டாடுகிறது.
யோனி அல்லது கருவறை, தெய்வீகத் தாயின் தத்துவத்தின் புனித இருப்பிடம் ஆகும். உலகப் பெண்களிடம், அது உயிரைப் பிறப்பிக்கும் புனித இடம் ஆகும். எனவே, அதற்கும், உயிர் கொடுக்கும் பெண்களின் ஆற்றலுக்கும் ஒருவர் எப்போதும் வணக்கத்தைப் பேண வேண்டும்.
“மா காமாக்யா கோயில்”